Table of Contents
Join our Groups | |
join |
மகா சிவராத்திரி 2023 விரதம் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டியவை
சிவராத்திரி 2023 விரதத்தை தொடங்குவதற்கு முன்:
மகா சிவராத்திரி 2023 விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள் கடைசி உணவில் புரோட்டீன் அதிகமாகவும், சர்க்கரை குறைவாகவும் இருப்பதை உறுதி செய்வது முக்கியம், ஏனெனில் இது உங்கள் மூளையில் பசி உணர்வை தூண்டுவதை குறைத்து, விரதத்தை எளிமையாக கடைபிடிக்க உதவும்

மகா சிவராத்திரி விரதத்தை முடிக்கும் போது:
விரதத்தை முடிக்கும் போது சரியான உணவை உட்கொள்வது அவசியம். விரதத்தை நிறைவு செய்யும் போது காய்கறிகள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விரதத்தை முடிக்க முதலில் இனிப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது.
மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்யக்கூடாதவைகள்:
சிலர் விரதம் இருக்கிறேன் என உணவு ஏதும் சாப்பிடாமல் காபி அல்லது டீ மட்டுமே குடிப்பார்கள். இது தவறான முறை. ‘தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கிறேன் என்பதும் சரியானது அல்ல. இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும். அது பல நோய்கள் வரக் காரணமாக அமையும்.
விரதம் இருக்கும் நாளில் எண்ணெயில் செய்யப்படும் உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது. காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துவிட்டு விரதத்தை முடிக்கும்போது பழச்சாறு அருந்தினாலும் பெரிய பயன் இருக்காது. மலச்சிக்கல், வயிற்றுப்புண், தலைவலி, எரிச்சல் போன்றவை ஏற்படக் கூடும்.
சனிபெயர்ச்சி 2023 பலன்கள் மற்றும் பரிகாரங்கள் Sani peyarchi 2023 Palangal in tamil Read now
1. முறையான திட்டமிடுதலுடன் தொடங்க வேண்டும்.
மஹா சிவராத்திரி நாளின் நான்கு சாம பூஜை நேரங்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :
அம்மனுக்கு நவராத்திரி போல சிவபெருமானுக்கு மஹாசிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும்.
சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
மஹாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.
வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.
சிவ ராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாம பூஜை நடைபெறும்.
இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாம பூஜையும், நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மூன்றாம் ஜாம பூஜையும் நடைபெறும்.
3 மணி முதல் அதிகாலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
*முதல் ஜாம பூஜை*
முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.
இதனால் ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.
*இரண்டாம் ஜாம பூஜை*
இந்த ஜாமத்தில் மஹாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்.
விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது.
இந்த இரண்டாம் ஜாம வேளையில், சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம் செய்ய வேண்டும். யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும்.
இதனால் வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.