10th marksheet issue date tamilnadu 2023
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி வாங்கியவுடன் செய்ய வேண்டியவை
10th marksheet issue date tamilnadu 2023 : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு 2022 2023 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்கள் வாங்கியவுடன் சரி பார்க்க வேண்டியவை.
Join our Groups | |
join |
மாணவர்கள் தங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர் எழுதிய தேர்வு மையத்தின் மூலம் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்கியவுடன் செய்ய வேண்டிய மற்றும் சரிபார்க்க வேண்டிய முக்கியமானவைகள்.
- மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்துடன் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்க்கவும்.
- மாணவர்களின் பிறந்த தேதி சரியாக உள்ளனவா என சரி பார்க்கவும்.
- மாணவரின் பெற்றோர் பெயர் தந்தை மற்றும் தாயின் பெயர் ஆங்கில மற்றும் தமிழில் சரியாக உள்ளனவா என்பதை சரி பார்க்கவும்.
- மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் பாட வாரியாக சரியாக உள்ளனவா என்பதை சரி பார்க்கவும்.
- மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியின் பெயர் சரியாக உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
- தனித்தேர்வர்களுக்கு பள்ளியின் பெயருக்கு பதிலாக பிரைவேட் என வந்திருக்கும் அதை சரி பார்க்கலாம்.
- மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றுகளை சரி பார்த்த பின் அனைத்தும் சரியாக இருப்பின் பின் செய்ய வேண்டியவை.
- மாணவர்கள் தங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தங்களுடைய ஈமெயில் முகவரியில் சேமித்து வைக்கவும்.
- மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை போதிய அளவுக்கு ஒளி நகல் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளவும்..
- பின்னர் மாணவர்கள் தாங்கள் தற்போது படிக்கும் உயர் கல்விக்கு படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளை ஒப்படைக்கலாம்.

மாணவர்கள் முடிந்தவரை தங்களுடைய மதிப்பெண் சான்றுகளை ஒரு வார கால இடைவெளிக்குள் தங்களுடைய பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றுகளை தாங்கள் பயின்ற பள்ளி அல்லது தனித் தேர்வுகள் தாங்கள் தேர் எழுதிய தேர்வு மையத்தில் சென்று தங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளை உடனடியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் வாங்கிக் கொள்ளவும்.
TN 10th marksheet issue date tamilnadu 2023
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறையானது அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்டு 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மாணவர்கள் தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்கி உடன் மாணவர்கள் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான செயல் என்னவென்றால் மாணவர்கள் தங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு பதிவானது தற்பொழுது ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்படுகிறது எனவே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் தங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளை பதிவு செய்து கொள்ளலாம் பதிவு செய்து கொண்ட உடன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு எண் வழங்கப்படும்.
Employment Registration online
