நேரடி பண பரிவர்த்தனைகளை விட சமீப நாட்களாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில், Google Pay, PhonePe, Paytm போன்றவற்றில் அதிகபட்ச உச்ச வரம்பு விதிக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Pay, PhonePe, Paytm பயன்படுத்துபவரா நீங்கள்?

உச்ச வரம்பு: Google Pay PhonePe Paytm
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்கள் நேரடி பண புழக்கத்தையும், தேவையற்ற அனைத்து செலவுகளையும் குறைக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. UPI பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பாக, எந்த வித சிரமமும் இன்றி நடப்பதால் மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தான் விரும்புகின்றனர்.
இந்நிலையில், Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகளில் செய்யப்படும் UPI பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிக்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. NPCI டிஜிட்டல் பேமென்டின் வரம்பை 30% ஆக குறைப்பதற்காக டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு அளித்துள்ளது.
GPAY செயலியின் UPI-க்கான முடிவு இந்த மாத இறுதிக்குள் எடுக்கப்படும் என்றும், PAYTM மற்றும் PHONEPE இதற்கான அனுமதியை கோரி NPCI-ஐ நாடி உள்ளது. ஆனால் மத்திய அரசு UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் எண்ணம் இல்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.