டிசம்பர் 5 ம் தேதி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது Happy TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th

TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th

TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th டிசம்பர் 5 ம் தேதி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th
TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th

TNPSC Group 2 Mains Result Date 2023

December 5th 2023

இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. 

டிஎன்பிஎஸ்சி  குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் 2023

முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

டிசம்பர் 5ஆம் தேதி தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் (TNPSC Group 2 Mains Result 2023) டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது முழுமை அடையும் நிலையில் இருப்பதாகவும் முடிந்தவுடன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, முதல்நிலைத் தேர்வை தேர்வர்கள் 2022 மே மாதத்தில் எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல தொடர்ந்து நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என 2 ஆண்டுகளைக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.  

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th
TNPSC Group 2 Mains Result Date 2023 December 5th

tnpsc group 2 Mains result 2023 pdf download

tnpsc group 2 result 2023 pdf download Click

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!