Typewriting Exam September 2022 தட்டச்சு தேர்வில் பழைய நடைமுறையை பின்பற்றுமாறு தொழில்நுட்ப கல்வி இயக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தட்டச்சு சுருக்கெழுத்து கணினி பயிற்சி மையங்களின் சங்கத் தலைவர் எஸ். சோமசங்கர் தாக்கல் செய்த மனு:
கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வுக்கான அறிவிப்பில் தட்டச்சு தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 நடைமுறை அப்படியே தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து பழைய நடைமுறையிலேயே தேர்வு நடத்தக் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் எங்களது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அறிவிப்பின்படியே தேர்வு நடத்தப்பட்டது அதோடு வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்வையும் அதே நடைமுறையில் நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது .ஆகவே பழைய நடைமுறையில் தட்டச்சு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி .ஆர் .சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு :
இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை தொழில்நுட்பக் கல்வி இயக்கங்கள் முறையாக பின்பற்றவில்லை. ஆகவே புதிய நடைமுறையில் தேர்வு நடத்த முடிவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவை குறிப்பிட்டுள்ளார்.
Typewriting exam time table November 2022
