தமிழகத்தில் ஜூன் 26 முதல் புதிய அமல்! ஹெல்மெட் அணிவது கட்டாயம்!
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் – ஜூன் 26 முதல் அமல்!
Are Helmets Compulsory Use In Tamil Nadu தமிழகத்தில் அதிகளவில் நடைபெறும் உயிரிழப்பை தடுப்பதற்காக இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற திட்டம் வரும் ஜூன் 26 முதல் அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Join our Groups | |
join |
ஹெல்மெட்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முழுமையாக விபத்துகளை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகனங்களுக்கு பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையின் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களை தொடர்ந்து தமிழகத்திலும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற புதிய திட்டம் பொதுமக்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹார்ன்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா எனவும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக அதிக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளை ஓரளவுக்கு தடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.