SSC JE Notification 2023
SSC JE ஜூனியர் பொறியாளர் வேலைவாய்ப்பு 1324 காலிப்பணியிடங்கள்
SSC JE Notification 2023 SSC JE ஜூனியர் பொறியாளர் வேலைவாய்ப்பு 1324 காலிப்பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு தேதியை அறிவித்துள்ளது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். காலிப்பணியிட விவரங்கள் மற்றும் விண்ணப்ப விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகளை செய்து வருகிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். தற்போது இந்தியா முழுவதும் 1324 சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் ஜூனியர் பொறியாளர் பணிகளுக்காக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் தகுதி உடையவர்கள் 16.8.2023ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Join our Groups | |
join |
காலிப்பணியிட விவரம்
அகில இந்திய அளவில் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் ஜூனியர் பொறியாளர்கள் பணிக்கு 1324 காலிப்பணியிடங்கள்.
கல்வி தகுதிகள்
அந்தந்த துறைக்கு ஏற்றவாறு பி.இ, பி.டெக் மற்றும் டிப்ளமோ கல்வி முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
சம்பளமாக ரூபாய் 35400-112400 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயது வரை இருக்கலாம். வயது வரம்பு விதிகளின் படி வயது வரம்பு தளர்வும் உண்டு.
SSC ஜூனியர் பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
STEP 1 : SSC இணையதளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : முதலில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்து கொண்டு, லாகின் விவரங்களை பெற்று கொள்ளவும்.
STEP 3 : பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள லாகின் பகுதி மூலம் லாகின் செய்து உள்ளே செல்லவும்.
STEP 4 : ஜூனியர் பொறியாளருக்கான அறிவிப்பின் மீது கிளிக் செய்யவும்.
STEP 5 : கேட்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக உண்மையாக பூர்த்தி செய்து, சான்றிதழ்கள் மற்றும் போட்டோவை இணைக்கவும்.
STEP 6 : ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு விண்ணப்பத்தை சப்மிட் செய்யவும்.
விண்ணப்ப கட்டணம்
- SSC ஜூனியர் பொறியாளர் பணிக்கு விண்ணப்ப கட்டணமாக அனைவரும் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
- SC, ST, PwBD பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.