தமிழகத்தில் நாளை ஆகஸ்ட் 26 முதல் தொடர் விடுமுறை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு அறிவிப்பு!
TN Transport Announced Special Bus
TN Transport Announced Special Bus சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை நிமித்தமாகவும், கல்வி ரீதியாகவும் பலரும் வசித்து வருகின்றனர். இவர்கள் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) முதல் வார இறுதி நாட்கள், முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை (ஆகஸ்ட் 29) என பெரும்பாலானோர் தொடர் விடுப்பு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்.

இவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க, சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கோயம்புத்தூரில் இருந்து மதுரை, தேனி, கேரளா, உதகை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Join our Groups | |
join |