தமிழக பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TN Bus Ticket 50% Offer New Update
TN Bus Ticket 50% Offer New Update சமீபத்தில் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக, விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து இருந்தது.
Home Page : Link

tn bus ticket 50% offer price அதாவது, பொது மக்களின் தொலைத் தூர பயணங்களுக்கு விரைவு பேருந்து முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த வகையான விரைவு பேருந்துகளில், மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து தொடர்ச்சியாக பயணம் செய்யும் பயணிகளுக்கு 6 வது முறையை பயணம் செய்யும் போது, 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
Tamilan Zone whatsapp Group Link Click
tn bus ticket offer இந்த திட்டமானது, தற்போது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கட்டண சலுகையை பெறுவதற்காக www.tnstc.in என்ற இணையதளத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குளிர் சாதனம், கழிப்பறை, படுக்கை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய இத்தகைய விரைவு பேருந்துகள் தமிழகத்தில் மட்டும் 1078 பேருந்துகள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.