TNPSC Revised Annual Planner 2023
TNPSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2023 TNPSC Revised Annual Planner 2023 தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு காலண்டர்/ஆண்டு திட்டமிடலை வெளியிட்டுள்ளது. TNPSC வருடாந்திர திட்டத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான tnspsc.gov.in இல் பார்க்கலாம்.

TNPSC தேர்வு காலண்டர் 2023 ஆம் ஆண்டில் 29 ஆட்சேர்ப்பு தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படும் தற்காலிக மாதங்களை மட்டுமே பட்டியலிடுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திருத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
whatsapp Group link | Telegram Group link |
Group 1 link | Group 1 link |
Group 2 link | Group 2 link |
TNPSC Revised Annual Planner 2023
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது.
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சில நாட்களுக்கு முன் தேர்வாணையம் வெளியிட்டது. அந்த அட்டவணையில், தற்போது நடந்து முடிந்துள்ள முதல் நிலை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 இடங்களுக்கும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில், சாலை ஆய்வாளர் பணியில் காலியாக இருக்கும் 762 பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு மே மாதம் நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில், 101 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Revised Annual Planner 2023
மேலும் சுற்றுலா துறையில் உதவி அலுவலர் பணி நிலை 2-ல் 17 பணியிடங்களும், உதவி புவியியலாளர் பணியிடங்களில் 19 இடங்களும், விளையாட்டு இயக்குனர் பணியில் 12 இடங்களும், தமிழ்நாடு கால்நடை சேவை துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தில் ஐந்து இடங்களும் என 11 பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும், அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் குரூப் 2, 2ஏ, குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல் இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை. இந்த அட்டவணையை பார்த்த தேர்வர்களும், நிபுணர்களும் அதிர்ச்சி அடைந்ததோடு, மிகுந்த வேதனையை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை இன்று (டிசம்பர் 20) வெளியிடப்பட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வுகள் 2023 நவம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலியிடங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை. இருப்பினும் குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. அட்டவணையை பார்க்க இங்க லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Revised Annual Planner 2023
TNPSC Revised Annual Planner 2023 Download