Tamilnadu Budget 2023 Tamil குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வருமா?
Tamilnadu Budget 2023 Tamil இந்த பட்ஜெட்டினை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
பட்ஜெட்டில் வெளியாகுமா? 20223 – 24ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்ட சபை தேர்தல் குறித்தான பிரச்சாரத்தின் போது, இது குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join our Groups | |
join |
வரி குறைக்கப்படுமா? ஆக இந்த மாதம் 1000 ரூபாய் திட்டம் குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் எரிபொருள் விலையினை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆக இது குறித்தான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilnadu Budget 2023
முக்கிய தேவை இன்று தமிழகத்தின் முக்கிய தேவையாக இருப்பது வேலை வாய்ப்புகள் தான். ஆக அன்னிய முதலீடுகளை அதிகரித்து, அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, குறிப்பாக தொழில் குறித்தான திறனை மேம்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படலாம். இது மேற்கொண்டு வேலை வாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க உதவலாம்
விவசாயிகளின் கோரிக்கை நீண்டகால விவசாய மக்களின் கோரிக்கையாக இருந்து வருவது நெல் கொள்முதல் நிலையங்களில், மழை, வெயில் காலங்களில் மழையில் நனைந்தும், வெயில் காய்ந்தும் வீணாவதையும் காண முடிகிறது. ஆக நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கிய நீர் ஆதாரங்கள் தூர் வாரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை இருந்து வருகின்றது. ஆக இது குறித்தும் முக்கிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்கள் தரப்பில் நீண்டகாலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக போராட்டங்கள் கூட இருந்து வரும் நிலையில், இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
Tamilnadu Budget 2023
தொழில் பூங்கா இதுமட்டும் அல்ல, தமிழகத்தில் தொழில்துறையினை மேம்படுத்த பல இடங்களில் தொழில் பூங்காக்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் வேலை வாய்ப்பினை அதிகரிக்க முடியும்.
ஆளும் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிகளில் எதிர்பார்ப்புடன் இருப்பது மாதந்தோறும் பெண்களுக்கான ரூ1,000 உதவித் தொகை வழங்குவது. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். ஆகையால் பெண்களுக்கான ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதிர்ப்பார்ப்புகளில் முதன்மையானதாக உள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது குறித்த
அறிவிப்புக்கும் சாத்தியம் இருக்கிறது என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் தங்களது பல்வேறு கோரிக்கைகள் எப்படியும் நிறைவேற்றப்படும் என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Tamilnadu Budget 2023 Tamil
2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள். இதனை ஏற்று திமுக ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது.

தங்களது இந்த அதிருப்தியைப் போக்கும் வகையில் நாளைய பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும்- பழைய ஓய்வூதிய திட்டமே அமலில் இருக்கும் என்ற அறிவிப்பு இடம்பெறக் கூடும் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு. அதேபோல காலி பணி இடங்கள் நிரப்புதல், தொகுப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப் பணியாளகளாக்குதல், சாலைப் பணியாளர்கள் கோரிக்கை ஆகியவற்றையும் திமுக அரசு நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்பதும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு.