Whatsapp @ AI New update புதிய அப்டேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்
Whatsapp AI New Update 2023
Whatsapp AI New Update 2023 வாட்ஸ் அப்பில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் இன்றைக்கு உலகில் அனைத்து மென்பொருள் இணையதளங்களிலும் ஏ ஐ என்கின்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் இன்று உலகத்தையே ஆட்டி படைக்கின்றது தற்போது இந்த தொழில்நுட்பம் வாட்ஸ் அப்பிலும் வந்துள்ளது.
இந்த அம்சம் பயனர்கள் AI தொழில்நுட்பத்தால் இயங்கும் ஸ்டிக்கர்களை உருவாக்க மற்றும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும். ஸ்டிக்கர் தாவலில் கீபோர்டைத் திறக்கும்போது பயனர்கள் புதிய “உருவாக்கு” பொத்தானைப் பார்க்க முடியும். இதைப் பயன்படுத்தி, தொடர்புடைய AI ஸ்டிக்கர்களின் உருவாக்கத்தைத் தூண்டுவதற்கு ஒரு விளக்கத்தை உள்ளிடலாம்.
Join our Groups | |
join |
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை ஜெனரேட் செய்து, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல். தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஏஐ மூலம் ஸ்டிக்கர் ஜெனரேட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த அம்சத்தை கொண்டுள்ள வாட்ஸ்அப் வெர்ஷனை பீட்டா டெஸ்டர்கள் தங்கள் போன்களில் நிறுவி, சோதனை செய்து பார்த்துள்ளனர். பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கீபோர்டில் ஸ்டிக்கர் டேபில் ‘கிரியேட்’ எனும் டேபை கிளிக் செய்து, தங்களுக்கு என்ன மாதிரியான ஸ்டிக்கர் வேண்டுமென விவரித்து, அதை உருவாக்க முடியுமாம். முற்றிலும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஏஐ ஸ்டிக்கர் உருவாக்கப்படுகிறதாம்.
இது பயனர்களின் உரையாடலை மேலும் சுவாரஸ்யமான வகையில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவ மற்றும் உரையாடலுக்கு ஏற்ப இந்த ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்கலாம். இதன் வாட்ஸ்அப் சார்ந்த மேம்பாடுகளை கண்காணித்து வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.