Whatsapp New Update 2023 Super Twist ,Edit Message
வாட்ஸ் அப்பில் புதிய அறிமுகம் சூப்பர் டூவிஸ்ட்

டெலிகிராம் செயலியை விட வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் வரும் ஒவ்வொரு புதிய அம்சங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் உலகம் முழுவதும் இந்த வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
Join our Groups | |
join |
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய மெசேஜ்-ஐ எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஆனால் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே மெசேஜை எடிட் செய்ய முடியும் என மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
Whatsapp New Update 2023
மேலும் இந்த புதிய வசதி முதலில் பீட்டா (betta) வெர்சனாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி உலகம் முழுவதும் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புத்தம் புதிய வசதி அனைவருக்கும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் உங்கள் நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய பின் அது தவறாக இருக்கிறது என்று நினைத்தால், அதைக் கொஞ்சம் நேரம் கையை வைத்து அழுத்துங்கள். அதாவது லாங்பிரஸ் செய்தால், திருத்து என்று ஆப்ஷன் வரும். அதைத் தேர்ந்தெடுத்து மேசேஜை திருத்திக் கொள்ளலாம்.
Whatsapp New Update 2023
ஆனால் முன்பு கூறியது போல் 15 நிமிடங்கள் வரை தான் இதற்கு அனுமதி, அதற்குள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் தவறான மெசேஜ் அனுப்பினால் அதே உடனே every one delete ஆப்சன் கொடுத்தால் மொத்தமாகப் போய்விடும்.இதை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக இனி திருத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் மெசேஜ்களில் எழுத்துப்பிழைகளைச் சரி செய்ய மக்களுக்கு இந்த வசதி நிச்சயம் உதவியாக இருக்கும். அதேசமயம் திருத்தப்பட்ட செய்தி என்பதும் மெசேஜ் அனுப்புபவர்களுக்குத் தெரியும்.
Tamilanzone Whatsapp Group link Join
TN Education News Whatsapp Group Link Join
அதேபோல் வாட்ஸ்அப் செயலிகளிலும் அவ்வப்போது சில மோசடி அழைப்புகள் வருகிறது. அதுவும் பக்கத்து வீட்டில் இருந்தால் கூட வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற சில மோசடிகள் தற்போது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பகுதி நேர வேலை வாய்ப்புகள் என்று அறிவித்துக் கூட சிலர் மோசடி செய்வதைச் செய்திகளில் படித்திருப்போம்.
Whatsapp New Update 2023
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் தற்போது அதிகரித்து வரும் மோசடியை தடுப்பதற்காக மெட்டா நிறுவனத்துடன் ட்ரூ காலர் நிறுவனம் இணைந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் கொண்டுவரும் புதிய அம்சம் மூலம் மோசடி அழைப்பு மற்றும் மோசடி மெசேஜ்களை பயனாளர்கள் எளிதில் கண்டுகொண்டு பிளாக் செய்யலாம்.
குறிப்பாக இந்த புதிய அம்சம் தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், விரைவில் உலகம் முழுவதும் இது அனைவரின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் ட்ரூ காலர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.