Jailer movie review tamil
Jailer movie review tamil படம் எப்படி இருக்கு? தலைவர் ரஜினிக்கு நடிப்பு சூப்பர்!
Jailer movie review tamil படம் எப்படி இருக்கு? தலைவர் ரஜினிக்கு நடிப்பு சூப்பர்! : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதாலும்; இந்தப் படத்தின் ஹிட் அவருக்கு அவசியம் தேவை என்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் தலைவர் தரிசனத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களை திருவிழா போல் மாற்றியிருக்கின்றனர்.
முதல் காட்சி: தமிழ்நாட்டில் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை. 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதேசமயம் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. அங்கிருக்கும் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர். திரையரங்குக்குள் இருந்தபடி புகைப்படத்தையும் தங்களுடைய ட்விட்டர் பகக்த்தி பகிர்ந்துவந்தனர்.
Join our Groups | |
join |

தமிழ்நாட்டு ரசிகர்கள்: 9 மணிக்கு இங்கு முதல் காட்சி திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் அதற்கு முன்னதாகவே திரையரங்குகளுக்கு முன்னர் குழும ஆரம்பித்தனர். ஒருவழியாக 9 மணிக்கு முண்டியடித்து தியேட்டருக்குள் சென்றவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று பெயர் வரும் இடத்திலேயே கரகோஷம் எழுப்பி, விசில் அடித்து கொண்டாடினார். இந்தச் சூழலில் படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனம் தெரியவந்திருக்கிறது.
எப்படி இருக்கிறது முதல் பாதி: ஏற்கனவே தகவல் வெளியானபடி தன்னுடைய மகனை காப்பாற்ற போராடும் தந்தையின் கதைதான் ஜெயிலர் ஒன்லைன் என்பது உறுதியாகியிருக்கிறது. நேர்மையான காவல் துறை அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி ஒரு சட்டத்திற்கு விரோதமான செயலை (என்னவென்று படம் பார்த்து தெரிந்துகொள்ளலாமே) தடுக்க முயல்கிறார். அது அவருக்கும், வில்லனுக்குமான மோதலாக விரிகிறது.
ரொம்ப ஸ்லோ: அந்த மோதலால் வசந்த் ரவி கடத்தப்படுகிறார். கட்டத்தப்பட்ட ரவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் அவரை காப்பாற்ற ரஜினிகாந்த் போராடும்படி முதல் பாதி செல்கிறது. நெல்சன் திலீப்குமார் வழக்கமான தனது டார்க் காமெடியை இதிலும் தூவியிருக்கிறார். அது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை என ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.
குறிப்பாக படத்தின் முதல் பாதியில் வெகுநேரம் ரொம்ப ஸ்லோவாக செல்கிறது என்கின்ற ஒரு கருத்தும் தியேட்டரிலிருந்து கேட்கிறது. அதேசமயம் புயலுக்கு முன் ஒரு அமைதி இருக்குமே. அப்படித்தான் அந்த அமைதி. அதுவரை ஒரு குடும்பஸ்தனாக பொறுப்புள்ள கணவனாக,தகப்பனாக இருக்கும் முத்துவேல் பாண்டியன் தனது குடும்பத்தை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு வில்லன்களிடம் மோதும்போது புலியாக மாறி சீறுகிறார்.
அந்த சீன்தான் இடைவேளை காட்சி. அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த தியேட்டரும் தெறிக்கிறது. ரஜினிக்கான உச்சக்கட்ட மாஸ் காட்சி அதுதான் என கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். அதனால் முதல் பாதி தங்களுக்கு திருப்தி தந்ததாகவும் கூறுகின்றனர். அதற்கு பிறகு முத்துவேல் பாண்டியனுக்கு ப்ளாஷ்பேக்கும், மகன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கான விடையும் இரண்டாம் பாதியில் இருக்கிறது.
படத்தின் கதை
நேர்மையாக இருக்கும் தனது போலீஸ் மகனுக்கு எதிரியால் ஆபத்து நேர்ந்தால், மீதம் இருக்கும் குடும்பத்தை காக்க, அப்பா என்ன செய்கிறார் என்பதே ஜெயிலர் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும்.
சிலை கடத்தல் மன்னனாக விநாயகன் குழு செயல்படுகிறது. அந்த கடத்திய சிலை அடங்கிய கண்டெய்னர் லாரி போலீஸ் அதிகாரி வசந்த் ரவியால் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அவர் காணாமல் போகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மகனை நேர்மையாக வளர்த்ததால் தான் வசந்த் ரவி இறந்ததாக குற்ற உணர்ச்சியில் பழிவாங்க ரஜினி புறப்படுகிறார். இதனால் குடும்பத்தினரை கொல்லும் முயற்சியில் வில்லன் கூட்டம் இறங்க , இந்த போராட்டத்தில் ரிட்டையர்ட் போலீஸ் ரஜினி எடுக்கும் அதிரடி ஆக்ஷன்களும், டிவிஸ்ட்களும் என இரண்டரை மணி நேரம் படமாக காட்சிப்படுத்தியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
நடிப்பு எப்படி?
படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம் தான் என்றாலும், கிடைத்த கேப்பில் எல்லாம் ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், சுனில் ஸ்கோர் செய்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் என கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்கள். தமன்னா நடிகையாகவே படத்திலும் வந்துள்ளார்.
படம் எப்படி?
அப்பா அல்லது குடும்பத்தை கொன்றவர்களை, கொல்ல முயற்சிப்பவர்களை ஹீரோ பழிவாங்குவது என்பது இந்திய சினிமாவில் சலித்துப்போன கதைகளில் ஒன்று. அதேசமயம் அதிசயமாக ஏதாவது ஒரு படத்தில் மகனை கொன்ற வில்லனை அப்பா பழி வாங்க நினைப்பது என்பது கதையின் ஒரு பாகமாவே வைக்கப்பட்டிருக்கும். இதில் அது மெயின் கான்செப்ட் ஆக வைத்து அதனை சிலை கடத்தல் தொடர்புடைய கதையாக அமைந்துள்ளது ரசிக்க வைத்துள்ளது. வழக்கமான தனது ஸ்டைல் உடன், ரஜினி ரசிகனாக ஃபேன் பாய் மொமண்ட் ஆக படத்தை அமர்க்களமாக கொடுத்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நெல்சன்.
இதனுடன் ரஜினியின் ஸ்டைலும், அனிருத்தின் ராக் மியூசிக்கும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும். காட்சிக்கு காட்சி ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். குறிப்பாக இடைவேளை காட்சி மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபு – ரஜினி இடையேயான காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், நிர்மலின் எடிட்டுங்கும் கதைக்கு தேவையான அளவை கச்சிதமாக செய்துள்ளது. இரண்டாம் பாதி நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
“பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லியே நரகத்துக்கு போயிடுவோம் போல”, “படிச்சாலும், ரிட்டையர்ட் ஆனாலும் வீட்டுல மதிப்பு இல்ல”, “சொன்னதுக்கு மேலயும், கீழேயும் இருக்க கூடாது. சொன்னபடி இருக்கணும்”, “நான் தான் இங்க கிங்” என ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள வசனங்கள் ரசிக்க வைக்கிறது. காவாலா, தலைவரு அலப்பறை பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.
ஆக மொத்தத்தில் நல்ல தியேட்டரில் “ஜெயிலர்” படம் பாருங்க.. “சூப்பர் ஸ்டார்” திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுங்க…! தலைவரு நிரந்தரம்……..