JEE Main Registration 2024 Online
JEE Main Registration 2024 Online விண்ணப்பிப்பது எப்படி? 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
Join our Groups | |
join |
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
அதன்படி, நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அண்மையில் வெளியிட்டது.
இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் விண்ணப்பப் பதிவு
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு இன்று (நவ.2) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் JEE Main 2024 registration என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்யவும்.
* அதில் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்யவும்.
75 சதவீத மதிப்பெண்கள் அவசியமில்லை
முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது.
’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/
தொலைபேசி எண்: 011-40759000
இ- மெயில் முகவரி: jeemain@nta.nic.in