Tirupati vaikunta ekadasi 2023 tickets
Tirupati vaikunta ekadasi 2023 tickets வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்; நவ., 10 முதல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்.
Join our Groups | |
join |
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைகுண்ட துவார தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தரிசனத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி தரிசன டிக்கெட், அறை முன்பதிவு கோட்டா ஆகியவை நவ.,10ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன.
300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 2.25 லட்சம் எண்ணிக்கையில் நவ.,10 காலை வெளியாகும்; ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் 20 ஆயிரம் எண்ணிக்கையில் அன்று மதியம் 3 மணிக்கு வெளியாகும்.
அறை ஒதுக்கீடு கோட்டா மாலை 5 மணிக்கு வெளியாகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
TTD Tickets Booking Online