Madras University Result 2023 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவு
Madras University Result 2023 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவு , சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.

University of Madras Result
மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இதில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இணைப்புக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு மாற்றுப் பாலினத்தவருக்கு இடம் வழங்கப்படும் என்றும் இதன்மூலம் ஏராளமான மாற்றுப் பாலினத்தவர்களின் உயர் கல்வி உறுதி செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.
நவம்பரில் செமஸ்டர் தேர்வுகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான 1, 3 மற்றும் 5ஆம் செமஸ்டர் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டன. குறிப்பாக நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல், டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெற்றன. இரண்டு ஷிஃப்டுகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தலா 3 மணி நேரம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன.
வழக்கமாக தேர்வு முடிவுகள் 4 முதல் 6 வாரங்களில் திருத்தப்பட்டு, வெளியாகும். இதனால், பிப்ரவரி மாதம் 2 ஆவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் 2 வாரங்கள் கடந்தும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Madras University Result 2023 Date
தேர்வு முடிவுகள் வெளியாகாதது குறித்து இளங்கலை மாணவர்விடம் பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது, மூன்றாம் ஆண்டு,5ஆவது செமஸ்டர் தேர்வை எழுதியுள்ளேன். தேர்வு முடிவுகளை வைத்து வேலைக்குச் செல்லத் திட்டமிட்டேன். ஆனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் கடைசி செமஸ்டர் தேர்வுகளுக்குப் படிக்க முடியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகம் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.