Magalir urimai thogai latest News 1000 Rs monthly assistance
Magalir urimai thogai latest News குடும்பத் தலைவிகளுக்கு தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.. இந்த உரிமை தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளதாகவும் தெரிகிறது.1000 Rs monthly assistance latest News
ரூ.1000 உரிமைத்தொகை மகளிர் உரிமைத் தொகை
தமிழக அரசின் சார்பில் 2023 – 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது… இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.
இதில் தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது…
மகளிர் உரிமைத் தொகை 1000
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று பிடிஆர் அறிவித்தார்.. அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது… ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பியது..
வானதி கேள்வி: அதுபோலவே, அமமுகவும் கேள்வி கேட்டுள்ளது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்டார் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கேட்டிருந்தார் பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.

மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 யாருக்கு கிடைக்காது
இப்படி பல குழப்பங்கள் நிலவிவரும் நிலையில்தான், தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் யார், யாருக்கு கிடைக்கும் என்று தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. அதில், “ஏற்கெனவே, மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடைய மாட்டார்கள். வருமான வரி செலுத்தும் பெண்களும் பயனடைய மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. ஆனால், கண்டிப்பாக ஏழை, எளிய, நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயமாக ரூ.1000 உரிமைத் தொகையைப் பெறுவார்கள்” என்று தெரிவித்திருந்தார் கீதா ஜீவன்.
இந்நிலையில், இன்னொரு தகவலும் இது தொடர்பாக கசிந்து வருகிறது.. இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.. மேலும் இப்போது, ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்த தகவல்கள் வந்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 யார் யாருக்கு கிடைக்கும்
PHAAY: இதற்கு முன்பும் இப்படியான தகவல்கள் கசிந்தன.. அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்குகீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது. இப்படி பல்வேறு தகவல்கள் அடிக்கடி வட்டமடித்து வரும்நிலையில், இதுவரை அரசிடமிருந்து திட்டம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சட்டப்பேரவையில் அன்று முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இந்த திட்டத்தினால் மீனவ பெண்கள், கட்டுமான பெண் தொழிலாளர்கள், நடைபாதை வணிக பெண்கள், வீடுகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறியிருந்தார்.. மேலும் இந்த திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட பெண்களின் வங்கி கணக்கில் உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்படும் என்றும் இந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Tamilan Zone Whatsapp Group link | Click Join |
அரசு திட்டங்கள் மற்றும் செய்திகள் உடனே பெற | Click Join |
கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநில அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு தமிழக முதல்வர் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கினார். இன்று நாம் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றி பேசவுள்ளோம், இதன் கீழ் தமிழக பெண் குடிமக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.