மகளிர் உரிமைத் தொகைக்கு ஜனவரி 2024 முதல் புதிய விண்ணப்பம் பெறப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு Kalaignar magalir urimai thogai latest news Tamil

Kalaignar magalir urimai thogai latest news Tamil

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜனவரி 2024 முதல் புதிய விண்ணப்பம் பெறப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Kalaignar magalir urimai thogai latest news Tamil : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழக மக்களின் குடும்ப தலைவிகளுக்கு ஒரு மகத்தான திட்டமாக பார்க்கப்படுகின்றது இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி முதல் அந்தந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் மகளை உரிமை தொகைக்கு ஜனவரி 2024 முதல் புதிய விண்ணப்பம் பெறப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Kalaignar magalir urimai thogai latest news
Kalaignar magalir urimai thogai latest news

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜனவரி 2024 முதல் புதிய விண்ணப்பம் பெறப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

Kalaignar magalir urimai thogai latest news Tamil

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகரில் அவர் கூறியதாவது, ஜனவரிக்கு பிறகு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Kalaignar magalir urimai thogai 1000

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய…

திட்டத்தின் நோக்கம்

 ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

 குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

 அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான் மனித குலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும்.

 உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறியபோதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது.

 ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள்.

 அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூகச் சீர்திருத்தவாதிகள் பணியாற்றியதன் விளைவாக, இன்று பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் பயின்று, பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

 அரசுப் பணியாளர் தேர்வுகளிலும் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

 இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

Kalaignar magalir urimai thogai latest news
Kalaignar magalir urimai thogai latest news

 

TNPSC Group 2 Result Date 2024

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!