Tamil puthandu rasi palan 2023
Tamil puthandu rasi palan 2023 தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சுக்கிர ஓரையில் பிறக்கிறதுசோபகிருது. சோபகிருது என்றால் மங்களகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்களகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் பயணத்தாலும் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியாலும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்

தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023
மேஷம்: பொன்னான காலம் வரப்போகிறது. நல்ல வேலையும் பதவி உயர்வும் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் திறமைக்கேற்ப மதிப்பும் அங்கீகாரமும் தேடிவரும். திருமணம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கைகூடி வரும். இந்த ஆண்டு நல்ல செய்திகள் நிறைய தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மகளின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
Join our Groups | |
join |
Tamilan Zone whatsapp Group link | Join |
Tamilan Zone Home | Click |
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023
ரிஷபம்: இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு, சொத்து வாங்கலாம். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நோய்கள் நீங்கும். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுத சரியான நேரம் வெற்றிகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகளும் வரும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.
மிதுனம்: இந்த ஆண்டு நிறைய லாபங்கள் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். நீண்ட காலமாக தடைபட்ட சுபகாரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. புது வீடு கட்டலாம், வீடு கட்டி முடித்தவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். திருமணம் ஆகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு திருமணம் பேசி முடிவு செய்யலாம். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு பதவியும் பாராட்டும் கிடைக்கும். நோய்கள் நீங்கும் காலம் வரப்போகிறது.
கடகம்: உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படும். குருவின் பயணம் பார்வையால் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும் என்றாலும் நிறைய பண வரவு வரும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை நெருப்பு வாகனம் போன்றவைகளில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் செல்வது அவசியம். அரசு மூலம் கௌரவப் பதவி உயர்வு தேடி வரும். வேலை தொழில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும் இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
சிம்மம்: வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாரம்பரியமிக்க பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை கட்டிட தொழில் செய்பவர்களுக்கு நல்ல கணிசமான லாபம் கிடைக்கும். . உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். அதிக கடன் பிரச்சினையில் சிக்க நேரிடும். கடன்களில் இருந்து தப்பிக்க செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வண்டி வாகனம் வாங்கலாம். இரட்டிப்பு மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த வருடமாக உள்ளது.
கன்னி: பொருளாதாரத்தில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் தீரும் புதிய கடன்கள் வாங்கலாம். வீடு சொத்து வாங்குவதற்கு கடன் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. அடுத்தவர்களை நம்பி தொழில் வியாபாரத்தில் ஒப்படைப்பதை தவிர்க்கவும். சுபகாரியங்களில் தடை ஏற்படும். அதிக பண செலவை ஏற்படுத்தக்கூடிய புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரவும் வாய்ப்புள்ளது.
தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2023

துலாம்: துலாம் ராசிக்காரர்களே, அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு இணைய வாய்ப்புள்ளது கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் உதவிகள் தேடி வரும். குரு பலம் வந்திருப்பதால் திருமண சுப காரியம் கை கூடி வரப்போகிறது. ஒரு புதிய சொத்துக்களை வாங்குவதற்கு வாய்ப்பு கைகூடி வருகிறது. சிலருக்கு நல்ல வேலை மாற்றங்கள் ஏற்படும்.நல்லதொரு தமிழ் புத்தாண்டு பிறப்பதால் வரவேற்க தயாராகுங்கள்.
விருச்சிகம்: சோபகிருது தமிழ் புத்தாண்டில் நல்ல வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். விழிப்புடன் இருந்தாலே தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சரியான நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு சுறுசுறுப்பு கூடும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்லூரி கல்வி படிப்பதில் இருந்த தடைகள் விலகப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
தனுசு: தமிழ் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. பாக்கெட்டில் பணம் நிறையும் அளவிற்கு பணப்புழக்கம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். கௌவரவம் அந்தஸ்த்தும் தேடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப்போகிறது. சுப காரியங்களுக்காக கடன் வாங்குவீர்கள். மகாலட்சுமி யோகம் தேடி வரும் செல்வ நிலை உயரப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கப் போகிறது. கோச்சார ரீதியாக குருபலன் கை கூடி வந்துள்ளது. திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறீர்கள். இந்த ஆண்டு மன மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
மகரம்: தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சாதனைகள் புரியப்போகிறீர்கள். ஏற்றுமதி தொழில் லாபத்தைத் தரும். ஆன்லைன் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தரும். வேலை வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களுடைய ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நண்பர்கள் எதிரிகளாக மாற வாய்ப்பு உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். நல்ல பண வருமானம் வந்து சேரும். கண்டங்கள் விலகும். நோய்கள் நீங்கப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது.
கும்பம்: உடல் ஈரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் ஏற்படும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டில் மீது விழுவதால் மகிழ்ச்சியான திருமணவாழ்க்கை அமையும். தகவல் தொடர்பு சிறப்படையும் என்றாலும் பேச்சில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். பொறுமையை கையாளுங்கள். சிலருக்கு பதவியில் புரமோசன் கிடைக்கும்.
மீனம்: சோபகிருது தமிழ் புத்தாண்டு சுபிட்சமான ஆண்டாக அமைந்துள்ளது. பொற்காலம் தேடி வரப்போகிறது. ஆண்டு முழுவதும் நல்ல பணப்புழக்கம் இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் பண வரவு சரளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலம் வரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.