பள்ளிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை விடுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
School Holiday September 2023
School Holiday September 2023 : பள்ளிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை விடுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு . உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் அடிப்படை கல்வித்துறையானது, மாநிலத்தில் முன்னதாக ரத்து செய்வதாக அறிவித்த விடுமுறைகளை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகை மற்றும் தூய்மை இயக்க பணிகளுக்காக பள்ளிகளுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
Join our Groups | |
join |
பின்னர் அரசு இந்த விடுமுறை உத்தரவுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். எனவே, அரசு தற்போது விடுமுறை அறிவிப்புகளை மீண்டும் திருத்தியுள்ளது. அதன்படி அடிப்படை கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் திட்டமிடப்பட்ட விடுமுறை மீண்டும் அமல்படுத்தப்படும்.
இந்த நாட்களில் நடத்தப்பட இருந்த தூய்மை இயக்கப்பணிகள் மறுநாள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்களில் பள்ளிகளில் இருந்து பயன்படுத்த முடியாத பொருட்கள், உடைந்த மரச் சாமான்கள், கழிவு பொருட்கள் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவை அகற்றப்படும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பசுமை பள்ளி முயற்சிகள், சுகாதாரமான பள்ளி கண்காட்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முழுவதுமாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.