தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது?
TN Quarterly Exam Leave 2023
TN Quarterly Exam Leave 2023 தமிழகத்தில் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி ,ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது, அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் நடப்பு கல்வி ஆண்டில் பல்வேறு தீர்வுகள் நடத்தப்பட உள்ளன.
Join our Groups | |
join |
அதற்கான உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன் கருதி தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது .அதன்படி ,ஆறு முதல் 12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கிடையே ,இந்த கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிகள் திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது.
அதில் எந்தெந்த நாட்களில் பள்ளிகள் இயங்கும் விடுமுறை விவரங்கள் காலாண்டு அரையாண்டு பொதுத் தேர்வு தகவல்கள் இடம்பெற்று இருந்தன .சூழலுக்கு ஏற்ப அதில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை:
காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .எனவே, செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்த கல்வி ஆண்டில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
மாணவர்கள் நலன் கருதி தேர்வு கால அட்டவணையை முதன்மை கல்வி அதிகாரி அ. மார்ஸ் வெளியீட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உத்தேச கால அட்டவனை மாணவர்கள் நலன் கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.