9 பந்துகளில் அரை சதம் அடித்து புதிய சாதனை
T20 Cricket Fastest 50 Dheependra Singh
T20 Cricket Fastest 50 Dheependra Singh ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் தீபேந்திர சிங் சாதனை படைத்துள்ளார்.

Join our Groups | |
join |
ஆண்கள் கிரிக்கெட் குரூப் சுற்றில் மங்கோலியா அணியும், நேபாள அணியும் மோதின.
டாஸ் வென்ற மங்கோலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்த நேபாள அணியின் தீபேந்திர சிங், அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை பெற்றார். அவர் பேட்டிங் செய்த முதல் 9 பந்துகளில் 6, 6, 6, 6, 6, 2, 6, 6, 6 ரன்கள் ஸ்கோர் செய்தார்.
இதன்மூலம் சர்வதேச போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை தீபேந்திர சிங் முறியடித்தார்.