TTD Online Booking New website ttdevasthanams.ap.gov.in
திருப்பதி தேவஸ்தானம் புதிய இணையதள முகவரி
TTD Online Booking New website ttdevasthanams.ap.gov.in திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரை மாற்றியுள்ளது.
திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிக்கெட் கிடைத்து வந்தது. இதில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
Join our Groups | |
join |
இந்த இணையதளத்தை சிலர் போலியாக பயன்படுத்தினர்.
குறிப்பாக தரிசன டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றனர்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு புகார் வந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, ஐ.டி. துறை பொது மேலாளர் சந்தீப் ரெட்டி ஆகியோர் கலந்து ஆலோசித்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போலியான செயலியை உருவாக்காமல் மாற்ற முடிவு செய்தனர்.
TTD Online Booking New website

தற்போது தேவஸ்தான இணையதள முகவரி ttdevasthanams.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளது.
TTD New website 2023

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான தரிசனங்கள், தங்கும் வசதிகள், நன்கொடைகள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோவில்களின் சேவைகள் மற்றும் அம்சங்கள் இந்த அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கிடைக்கும்.
TTD Seva Online
