தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா ? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TN School Reopen Date 2023 தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா ? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை கழித்து வருகின்றனர்.

TN school reopen 2023 இந்த கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட உள்ளன.
Tamilan Zone whatsapp Group Link Click
தற்போது, தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகுமோ என்ற கேள்விகள் அதிக அளவில் எழுந்து வந்தன. TN school reopen ஆனால், இந்த தொடர் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 5ம் தேதி 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறியுள்ளார்.
Home Page : Link
TN school reopen date இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்கம் தரப்பில் இருந்து ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் புதிய பணியிட மாறுதலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அவர்களுக்கான கால அவகாசம் அளிப்பதற்காகவும் பள்ளி திறப்பு ஜூன் 12ம் தேதி தள்ளி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றனர். இவர்களது இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்தும், கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்தும் பள்ளி திறப்பில் மாற்றம் ஏற்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.