தமிழகத்தில் ஆகஸ்ட் 18 உள்ளூர் விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
TN School Leave August 18
TN School Leave August 18 தமிழகத்தில் ஆகஸ்ட் 18 உள்ளூர் விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல்வர் வருகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் இன்று (ஆக.16) மதுரையில் மாநகரில் புதுராம்நாட் ரோடு, சி.எம்.ஆர். ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனின் உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
Join our Groups | |
join |
அதனால் அன்றைய தினம் மண்டபம் ஒன்றியத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி மண்டபம் கலோனியர் மைதானத்தில் நடைபெற இருப்பதால் அங்கே முன்னேற்பாடு பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.