TN School Leave Tomorrow News Due To Rain
TN School Leave Tomorrow News Due To Rain தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமையான நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.
Join our Groups | |
join |

இந்நிலையில் தற்போது வரை மழை இடைவிடாமல் பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமையான நாளையும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ,பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு முதல் 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் மாவட்டங்கள்
சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஓர் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது இதன் காரணமாக
19.06.2023
வட தமிழகத்தில் அநேக இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென் தமிழகத்தில் ஒரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர்,கள்ளக்குறிச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
20.06.2023
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளை[20.06.2023] கனமழை காரணமாக விடுமுறை அளிக்க வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளைக்கும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது வழியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கனமழை தொடரும் என மாநில மையம் கூறியுள்ளதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு நாளையும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் விடுமுறை ஈடு செய்ய
பள்ளிகள் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு கனமழை அங்கங்கே தேங்கி இருந்தது.
அதனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அகற்ற செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் பள்ளி வளாகங்களை தேங்கியுள்ள மழை நீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் விருதுநகர் குமாரி ஆகிய எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் விடியும் விடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.