TNPSC Group 4 New Update 2023
TNPSC முக்கிய அறிவிப்பு குரூப் 4 தேர்வுகள் கவனத்திற்கு!!
TNPSC Group 4 New Update 2023 கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி நீண்ட நாட்கள் கடந்த போதிலும் தேர்வாணையம் பணியிடம் குறித்த அறிவிப்பை வெளியிட தொடர்ந்து கால தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. இந்நிலையில் தான் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

தற்போது இதை தொடர்ந்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங் இம்மாதம் 21ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை சென்னையில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதன் படி சான்றிதழ் சரிபார்ப்பு, கவுன்சலிங் நடக்கும் நாள், நேரம், மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Join our Groups | |
join |