Today Rain leave district in tamilnadu 2023 tamil இன்று தமிழகத்தில் மழை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Today Rain leave district in tamilnadu 2023 tamil

இன்று தமிழகத்தில் மழை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Today Rain leave district in tamilnadu 2023 tamil குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இந்த, நான்கு மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை பெய்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join
Today Rain leave district in tamilnadu 2023
Today Rain leave district in tamilnadu 2023

 

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைகிராமத்தில் மதியம் 3 மணி அளவு வரை 28.6 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 25.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து காலை முதல் மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பிரதான அருவியான குற்றால மெயின் அருவி,ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

1000 தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலி – சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைப்பு

தீயணைப்புத்துறை சார்பில் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் அனுப்பட்டுள்ளனர்

67 தீயணைப்பு வாகனங்களும், 43 படகுகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27,848 கனஅடி, இரவு 11.30 மணி நேரப்படி 5000 கனஅடி நீர் வெளியேற்றம்.

அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி, வைராவிகுளம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, ஆரடியூர், கீழ்முகம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் இன்று (டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு-அண்ணா பல்கலைக்கழகம்.

தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பு.

அரையாண்டுத் தேர்வு – 4 மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

கனமழை எதிரொலி

நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று 18-12-2023 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

 தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை

• நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

• தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

4 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

• கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

Today Rain Leave District in Tamilnadu

⛱️ தென்காசி
⛱️ தூத்துக்குடி
⛱️ கன்னியாகுமரி
⛱️ திருநெல்வேலி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் இன்று (டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.18) விடுமுறை அறிவிப்பு.

ஏற்கனவே தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று(டிச.18) பொது விடுமுறை

– தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.18) விடுமுறை அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் (18/12/2023) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Education News Update 

Home Page 

Today Rain leave district in tamilnadu 2023
Today Rain leave district in tamilnadu 2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!