இன்று கன மழை காரணமாக விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் 09.12.2022 today Rain Holiday School College tamilnadu

இன்று கன மழை காரணமாக விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் 09.12.2022 today Rain Holiday School College tamilnadu

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது. நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.9) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்காலில் இன்று(09.12.2022) மற்றும் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!