TN School Reopen Date 2023
TN School Reopen Date 2023 தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 18ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஏப்ரல் 8 ஆம்தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 19-ஆம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

பள்ளிகளில் நோட்டு புத்தகம் விநியோகிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களில் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் பெற்றோர்கள் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார் .
வெயில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறப்பது தள்ளி போகுமா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு ?
வெயில் அதிகமாக இருந்தால் ஜுனில் தாமதமாக பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனைக்குப் பிறகு இந்த தகவலை வெளியிட்டார்.