First graduate government order Pdf
அரசு வேலைகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – அரசாணை
First graduate government order Pdf Download தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு முன்னுரிமை:
தமிழக அரசின் வருவாய் துறை படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்த அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நிதி, மனித வள மேலாண்மை துறையின் மூலமாக நிரப்பப்படும் வேலைவாய்ப்புகளில் அரசு பணியிடங்களில் குறிப்பிட்ட சில இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
join |
அதாவது, கொரோனா தொற்றினால் தங்களது இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2010 – 2011ம் கல்வியாண்டில் இருந்து இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தில் தொழில்கல்வி பயில்வதற்கு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அறிவிப்புக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, அமைச்சர் (நிதி, மனிதவள மேலாண்மை) அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
*கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்
*முதல் தலைமுறைப் பட்டதாரிகள்
*தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
2010-2011-ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும்,அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்கும்.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டுள்ளது.முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – அரசாணை