Unemployed Scholarship form 2023-24 Tamilnadu
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை 2023-24
Unemployed Scholarship form 2023-24 Tamilnadu : தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Join our Groups | |
join |

Unemployed Scholarship
9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் படிப்புகள் படித்தவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித் தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்ப படிவம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் PDF Click
ER1 Form PDF Click
சுய உறுதிமொழி படிவம் Click
தமிழகத்தில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 1.10.2023 உடன் தொடங்கும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை பெற 10ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களும் அதற்கு மேல் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து, 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த உதவிதொகை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
TN Education News Click