10-ம் மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு துணைத்தேர்வு நாள் அறிவிப்பு TN 10th And 11th Arrear Exam Date 2023 ,Application,Last Date,Latest News

10-ம் மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு துணைத்தேர்வு நாள் அறிவிப்பு!

TN 10th and 11th arrear exam date 2023
TN 10th and 11th arrear exam date 2023

TN 10th and 11th Arrear Exam Date 2023 ,Application,Last Date,Latest News 10-ம் வகுப்பு ,11ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ள 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 3,60,908 மாணவர்களும், 4,12,779 மாணவிகள் என மொத்தமாக 7,73,688 பேர் தேர்வெழுதினர். இதனையடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெற்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp     join

Tamilanzone Whatsapp Group link Join

TN Education News Whatsapp Group Link Join

TN 10th and 11th Arrear Exam Date 2023

தமிழ்நாடு முழுவதும் 3,686 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் 9,76,089 மாணவர்கள் எழுதியுள்ளனர். ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தராமல் இருந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களையும் வரவழைப்பது என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதன் பலனாக பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வெழுதினர். இதனையடுத்து, கடந்த 19ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. அதன்படி 91.39 சதவிகிதம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 12,638 பள்ளிகள் இருக்கின்றன. இதில் 3,718 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளை பொறுத்த அளவில் 1,062 பள்ளிகள் முழு தேர்ச்சியை பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 11ம் வகுப்புக்கான துணைத் தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வுகளைப் பொருத்தவரை ஜூன் 27-ஆம் தேதி மொழிப் பாடம், ஜூன் 28-இல் ஆங்கிலம், ஜூன் 30-இல் கணிதம், ஜூலை 1-இல் விருப்ப மொழி பாடம், ஜூலை 3-இல் அறிவியல், ஜூலை 4-இல் சமூக அறிவியல் நடைபெற உள்ளது.

TN 10th and 11th Arrear Exam Date 2023

11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள், செவ்வாய்க்கிழமை (மே 23) நண்பகல் 12 மணி முதல் மே 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். அதைத் தவறவிட்டால் தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே31-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 500, பிளஸ் 1 வகுப்புக்கு ரூ. 1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: Content is protected !!